சொந்த ஊரு திருச்செந்தூர் ஆனாலும் படிச்சு வளந்ததெல்லாம் திருச்சிதான். அதனாலயோ என்னவோ இப்பவும் ரொம்ப பிடிச்ச ஊருன்னா அது திருச்சிதான் (சென்னை, கோவை எல்லாம் அதுக்கு அடுத்ததா லிஸ்ட்ல இருக்கற ஊருங்க). பல பிடித்த இடங்கள் மற்றும் பிடித்த விஷங்கள் நிறைய எனக்கு உண்டு அந்த மலைக்கோட்டை நகரத்துல. அந்தமாதிரி சில இடங்கள்ள முக்கியமா அங்க இருக்கற பேருந்து நிலையங்கள மறக்கவே முடியாது, சத்திரம் பேருந்து நிலையம் (ஜங்ஷன்), மத்திய பேருந்து நிலையம் (மெயின்கார்ட் கேட்), முக்கொம்பு, பாலக்கரை (சென்னைல புதுப்பேட்டை மாதிரி திருச்சியில பாலக்கரை), காந்தி மார்க்கெட், புத்தூர் நால்ரோடு, திருவரம்பூர், கைலாசபுரம், துப்பாக்கி தொழிற்ச்சாலை, அண்ணாநகர், தில்லைநகர் (மருத்துவமனைகள் அதிகமுள்ள பகுதி), TVS டோல்கேட், பிரபாத் தியேட்டர் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், அம்மா மண்டபம் (காவேரி நீர் அதிகமா வரப்போ வழக்கத்துக்கு அதிகமா அழகாருக்கும்), மலைக்கோட்டை, மாரிஸ் திரை அரங்கம், இப்ராஹீம் பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகள்.
பிடித்த விஷயங்கள்ல SJT பேருந்து பயணம், பிரபாத் திரையரங்கு அருகில் இருக்கற ஒரு கடைல சர்பத் குடிக்குறது (அந்த சர்பத் மாதிரி இதுவரைக்கும் வேற எதுவும் அந்த சுவை இருந்ததில்ல, RR சர்பத்னு நெனைக்கறேன், நாங்க சொல்றது பாய்க்கடை சர்பத்), இரவு நேரத்துல காந்தி மார்க்கெட் சுற்றியுள்ள பகுதிகள்ல ரவுண்டு அடிக்கறது, மலைக்கோட்டை நுழைவாயில்லருந்து வருசையா இருக்கற கடைகள வேடிக்க பாத்துட்டு போறது. (தி.நகர் சத்யா பஜார் மாதிரி அந்த ஏரியா, எம்புட்டு வேணும்னாலும் பேரம் பேசி வாங்கலாம்), அங்க இருக்கற தெப்பகுளத்துல பொறி போடுறது குளத்துல உள்ள மீன்கள பாக்கறதுக்கு (மீனு சாப்டுதோ இல்லையோ அத காரணமா வச்சு நாங்க வெட்டுவோம் சகட்டுமேனிக்கு). கலையைரங்கம் திரையரங்கத்துக்கு இருக்கற மெடிகல்ல ஜூஸ் குடிக்கறது. ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிர் சாலைல இருக்கற ஹோட்டல்ல ரவுண்டு கட்டுறது, விமான நிலையத்துக்கு பக்கத்துல இருக்கற செக் போஸ்ட்ல போலீஸ் நிறுத்தறப்ப நிக்காமபோய் குறுக்கு வழியில டோல்கேட் போறது (தொரத்திட்டு வந்துடுவாங்கன்னு ஒரு அலார்ட்டுதான் :) ), மொத்தத்துல எனக்கு மட்டும் இல்ல திருச்சியில இருந்த மற்றும் இருக்கின்ற அனைவருக்கும் அங்கு பல அனுபவங்கள் கிடைத்துருக்குமென்று நம்புகின்றேன் (சுத்த தமிழு :) )
இத்துடன் நகர்வலத்தில் திருச்சிராப்பள்ளியின் பகுதி நிறைவுபெறுகிறது, மீண்டும் நகர்வலத்தில் எனக்கு பரிட்ச்சயமான மற்றொரு பகுதியையும் அதன் சிறப்புகளையும் பார்க்கலாம் நன்றி.
பின்குறிப்பு: திருச்சிராப்பள்ளியில் பல பிரபலமான இடங்கள் இருப்பினும் எனக்கு பரிட்ச்சயமான பகுதிகளை மட்டும் பகிர்ந்துள்ளேன். நண்பர்கள் பதிவில் குறிப்பிடச்சொன்ன சில இடங்கள் எனக்கு பரிச்சயமில்லாத காரணத்தால் இந்த பகுதிகளில் குறிப்பிடவில்லை.
****************************
பின்னூட்டமிட்டு உற்ச்சாகமூட்டிய நண்பர்களுக்கும் மற்றும் பல அனுபவங்களை பகிர்ந்துகொண்ட கும்மி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
0 comments:
Post a Comment