சென்ற நகர்வலத்தின் கடைசி பத்தி: திருச்சியில இருக்கறப்ப எப்பவும் ஊருக்குள்ள பஸ்லதான் சுத்தறது, அப்டி சுத்தரப்ப நான் அதிகமா வேடிக்க பாக்கறது கடைகள்ள வச்சுருக்கற விளம்பர போர்டுதான். இப்போதான் எல்லாரும் ப்ளெக்ஸ் போர்டு வச்சுடறாங்க, ஆனா அந்த சமயத்துல அதிகமா பெய்ண்டிங்தான். அதுலயும் "குரு ஆர்ட்ஸ்"னு பெயர் போட்ருக்க விளம்பர போர்டு எல்லாமே அப்டியே அச்சுல வார்த்த மாதிரி தத்ரூபமா இருக்கும். திருச்சி வாசிகள் அனைவருக்கும் நல்ல பரிட்சயம் இருக்கும் அவர் ஓவியத்தோட. அவரபத்தி எதுவும் தெரியாது ஆனா அவர் வரஞ்ச ஓவியங்கள் அனைத்திற்கும் நான் ரசிகன்.
(நகர்வலத்தில் திருச்சிராப்பள்ளியின் முந்தைய பதிவுகளை பார்க்க விரும்புவோர்கள் இந்த சுட்டிகள் மூலமாக செல்லலாம் பகுதி 1, பகுதி 2)
திருச்சிராப்பள்ளி பகுதி 3 தொடர்கிறது.
கோவில்கள்னு பாக்கபோனா கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை மற்றும் இன்னும் சில ஊர்களில் பல பிரசித்திபெற்ற கோவில்கள் இருக்கு. ஆனா நம்ம நகர்வலத்துல இப்ப பார்த்துகொண்டிருப்பது திருச்சியைப்பற்றி, அதனால சின்ன வயசுல என் தலைல கொட்டி கூட்டிட்டு போன பல கோவில்கள்ல எனக்கு பிடிச்ச ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலைப்பற்றி சொல்றேன்.