Friday, December 10, 2010

நகர்வலம் - திருச்சிராப்பள்ளி ( பகுதி 2 )

சென்ற நகர்வலத்தின் கடைசி பத்தி : தி. நகர்லருந்த்து (தில்லை நகர்) மாரிஸ் தியேட்டர் பாலம் வழியா நேரா வந்தா மலைக்கொட்டையோட வாசல் ராஜா காலத்து குகை வாசல் மாதி உங்களை வரவேற்கும். சாமி படத்துலகூட விக்ரம் பிளாஷ்பேக் சொல்றப்போ ஒருத்தர ஓட ஓட தொரத்துவாறு அது மலைக்கோட்டை தெப்பகுளம் பகுதிதான். அதுக்கு பக்கத்துல மெயின் ரோட்ல ஒரு பெரிய சர்ச் இருக்கும் அங்க போனது இல்லைனாலும் வெளிய இருந்து பாக்கறப்ப ரொம்ப கம்பீரமா அழகா இருக்கும். (திருச்சிராப்பள்ளியின் முதல் பதிவை பார்க்க விரும்புவோர்கள் இங்கே செல்லலாம்)
                                                                                                        
திருச்சிராப்பள்ளி பகுதி 2 தொடர்கிறது.

திருச்சியில் மலைக்கோட்டைக்கு அடுத்ததாக நான் அதிகமாக போன இடம்னு சொல்லனும்னா தியேட்டர்தான். அதுல ஒண்ணுதான் இந்த மாரிஸ் தியேட்டர். நான் அதிகமா விரும்பி போறது அதுல மாரிஸ் 70mm காம்ப்ளெக்ஸ், சென்னைல இருக்கற தேவி தியேட்டர் மாதிரி இருக்கும் உள்ள. நீங்க பாத்துக்கிட்டுருக்கற படத்துல வலது பக்கமாதான் வாகனங்கள் நிறுத்துகின்ற  இடம் இருக்கும். தீபாவளி, பொங்கல் சமயத்துல படம் பார்க்க வந்தா இப்டி அமைதியா இருக்கற இடம் எங்க ஊர் தசரா விசேஷம் மாதிரி ஆகிடும். நான் இங்க அதிகமா செலவு பண்ணினது ஆளவந்தான் படத்துக்குதான். 

இந்த தியேட்டர் முன்னாடி ஒரு பாலம் இருக்கும், அதுக்கு பெயரே மாரிஸ் பாலம்னுதான் சொல்லுவாங்க. திருச்சி ஜங்ஷன்லருந்து உறையூர் மற்றும் தில்லைநகர் வழியா சத்திரம் பேருந்து நிலையத்துக்கு போகுற பஸ் எல்லாம் இந்த பாலம் வழியாதான் போகும். பாலம் ஏறி எறங்குனதும் நேரா பாத்தீங்கனா மலைக்கோட்டை வாசல் தெரியும், அதற்கடுத்து இந்த சர்ச் வழியா இடது பக்கம் நேஷனல் கல்லூரி, ஜோசப் கல்லூரி வழியா சத்திரம் பஸ் ஸ்டாண்டுக்கு போகலாம். அதுக்கு முன்னாடி வலது பக்கத்துல திரும்புனா (வாகனத்துல போகமுடியாது அது ஒன் வே, நடந்து போனா போகலாம்)  ஹோலி கிராஸ் கல்லூரி, ராஜா பார்க், ராமகிருஷ்ணா தியேட்டர், மரக்கடைன்ற பகுதிகள் எல்லாம் இருக்கும். இப்ப நான் சொன்ன ராஜா பார்க் முன்னாடி சாதாரணமா எல்லா எடத்த போல இருக்கும். இப்போ அந்த ஏரியா முழுவதும் சென்னை உயர்ந்த தெரு மாதிரி (அதாங்க ritchie street :) ) ஆகிடுச்சு. மொபைல் சிட்டின்னு ஒரு பில்டிங், அதுக்கு பக்கத்துல மொபைல் மற்றும் கணினி சம்மந்தமான பொருட்கள் எல்லாம் கிடைக்கும். சாயந்தரம் ஒரு ஆறு ஆறரை மணிக்கு மேல போனீங்கன்னா ரோடு ஓரத்துல பல நூடுல்ஸ் கடைகளாதான் இருக்கும்.
(சரி சரி வாய தொடச்சுகோங்க :) ) மாரிஸ் பாலத்துலருந்து அடுத்த வலது பக்கம் திரும்புனா இந்த பகுதிக்கெல்லாம் போகலாம். நேரா மலைக்கோட்டை வாசல் பக்கம் போய் அங்கருந்து வலது பக்கம் திரும்புனா (இந்த ரெண்டு சாலைக்கும் அதிக தூரமில்லை, வரிசையா ரெண்டு பஸ்ஸ நிக்க வச்ச எவ்ளோ தூரம் வருமோ அவ்ளோதான்) பிஷப் ஹீபர் ஹையர் செகண்டரி ஸ்கூல், சிங்காரத்தோப்பு, அடுத்ததா கெயிட்டி தியேட்டர் (திருச்சில இருந்தவங்க, இருக்கறவங்க கண்ணுமட்டும் பளிச்சுன்னு எரியுமே இப்போ :) ) அதற்கடுத்து பாஸ்போர்ட் அலுவலகம் வரும் அப்புறம் மார்கெட் தான் அந்த பகுதி முழுசா. அரிசிக்கு, எண்ணெய்க்கு, வெங்காயத்துக்கு, மற்ற மளிகை பொருட்களுக்குனு அதே பகுதியில சில சில அடி தூரத்துல கடைகள் இருக்கும். காய்கறி மார்கெட்டுக்கு காந்தி மார்கெட்தான். விடியகாலை ரெண்டு மணிலருந்து காலைல எட்டு மணி வரைக்கும் அப்டி ஒரு கூட்டம் இருக்கும் அங்க.
திருச்சியில இருக்கறப்ப எப்பவும் ஊருக்குள்ள பஸ்லதான் சுத்தறது, அப்டி சுத்தரப்ப நான் அதிகமா வேடிக்க பாக்கறது கடைகள்ள வச்சுருக்கற விளம்பர போர்டுதான். இப்போதான் எல்லாரும் ப்ளெக்ஸ் போர்டு வச்சுடறாங்க, ஆனா அந்த சமயத்துல அதிகமா பெய்ண்டிங்தான். அதுலயும் "குரு ஆர்ட்ஸ்"னு பெயர் போட்ருக்க விளம்பர போர்டு எல்லாமே அப்டியே அச்சுல வார்த்த மாதிரி தத்ரூபமா இருக்கும். திருச்சி வாசிகள் அனைவருக்கும் நல்ல பரிட்சயம் இருக்கும் அவர் ஓவியத்தோட. அவரபத்தி எதுவும் தெரியாது ஆனா அவர் வரஞ்ச ஓவியங்கள் அனைத்திற்கும் நான் ரசிகன்.

(அனுபவம் தொடரும்)

0 comments:

Post a Comment

 
Copyright © ken. All rights reserved.
Blogger template created by Templates Block | Start My Salary
Designed by Santhosh