தெரிஞ்சது, தெரியாதது, உட்டாலங்கடி, தத்துவம், நகைச்சுவை, படிச்சதில் பிடிச்சது (யாரது அங்க? செல்லாது செல்லாதுன்னு சொல்றது), எங்க தெருவுல நடந்தது அப்டி இப்டின்னு எல்லா விஷயமும் மொத்தமா ஒரு பதிவுல போடறதுதான் (நீயுமா!!) "காக்டெயில்". சரி வாங்க கண்டினியூ பன்னலாம். (பார்ரா)
ரொம்பநாள் கழிச்சு நாளைக்கு (10-12-2010) சென்னைல கிரிக்கெட் போட்டி நடக்கப்போகுது! இந்திய அணி ரன் மழை குவிக்கப்போகுதா இல்ல வானத்துலருந்து மழை கொட்டப்போகுதாணு தெரியல. ஆல் தி பெஸ்ட் இந்தியா! (நான் சொல்லி கொடுத்த மாதிரியே விளையாடுங்க கண்டிப்பா வெற்றி நமக்குதான் :) )
நம்ம நகர்வலம் தொடர்ல திருச்சிராப்பள்ளி பற்றிய தொடர்ல நான் எதிர்பாக்காத அளவுக்கு பதிவர்கள் மற்றும் வாசக நண்பர்கள் அனைவரும் அவர்களின் கருத்துக்களை மின் அஞ்சல் மூலமாகவும் பின்னூட்டங்கள் மூலமாகவும் தெரிவிச்ச வண்ணம் இருக்காங்க. அவங்க அனைவருக்கும் நன்றிகள்.
நம்ம கடைக்கு புதுசா ஒரு மென்பொருள் இன்ஸ்டால் பண்ணிருக்கேன், சும்மா சொல்லகூடாது உக்காந்த எடத்துலருந்தே எல்லா கணினியையும் கவனிச்சுக்கலாம். ஆள் இல்லாதப்ப உக்காந்த எடத்துலருந்தே மட்டற்ற கணினிகளை ஆப் பண்ணிக்கலாம், ரீஸ்டார்ட் பண்ணிக்கலாம், வாடிக்கையாளரோட விபரங்கள் மற்றும் உபயோகபடுத்துன கட்டணம் எவ்ளோன்னு துல்லியமா தெரிஞ்சுக்கலாம். கண்டிப்பா கணினி மையம் வச்சுருக்கரவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் இந்த மென்பொருள். க்ளின்க் (Clinck) அந்த மென்பொருளோட பெயர். இணைய மையம் வச்சுருக்கற நண்பர்களுக்கு விருப்பட்டா சொல்லுங்க தொடர்புகொள்ளும் முகவரி சொல்றேன்....முப்பது நாட்கள் முன்னோட்டமாக முயற்சி செய்யலாம். பிறகு அதற்குரியவர்களிடம் கூறினால் இலவசமாகவே அந்த மென்பொருளை உங்கள் அலுவலகத்திற்க்கே வந்து இன்ஸ்டால் செய்து கொடுப்பார்கள். வேறு ஏதும் சந்தேகம் என்றால் பின்னூட்டம் மூலமாக கேட்கலாம்.
இந்த வார குறுஞ்செய்தி:
இந்த வார சினி நியூஸ்:
இளைய தளபதி விஜய் இயக்குனர் சங்கர் இயக்கப்போற 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக்ல நடிக்கப்போரதில்லைன்னும், அந்த படத்திலிருந்து விலகப்போவதாகவும் தகவல், சங்கர் எதிர்பார்க்கிற விஷயங்கள்ல விஜய்க்கு கருத்துவேறுபாடு உள்ள காரணத்தினால் இந்த முடிவாம். (அப்போ வட போகபோகுதா)
இந்த வார வீடியோ:
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில ஒரு சின்ன பொண்ணு பாடுன பாட்டு, கேட்டு பாருங்க அசந்துருவிங்க.
இந்த வார இணையதள முகவரி:
நம்ம புகைப்படத்த விதவிதமான இடத்துல அழகா பாக்கறதுன்ன யாருக்குதான் புடிக்காது அந்த மாதிரி நம்ம புகைப்படத்த குடுத்தா விதவிதமா மாற்றி தருகிற ஒரு தளம்தான் இந்த போட்டோ-புனியா (photofunia) தெரியாதவங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நெனைக்கறேன். சுட்டி இங்கே (உதாரணத்துக்கு கீழே உள்ள படம்)அன்புடன்
தலதளபதி....
0 comments:
Post a Comment