Sunday, December 12, 2010

கூகிள் Adசென்ஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

இணையதளத்துல சம்பாதிக்கறதுக்கு ரொம்ப வழி முறைகள் இருக்கு, அதுல முக்கியமானது "விளம்பரங்கள் மூலமா சம்பாதிக்கறது". இலவசம் மற்றும் சொந்தமா இணையதளம் வச்சுருக்கறவங்க இந்த மாதிரி விளம்பரங்கள அதற்க்குன்னு இருக்கற நிருவனத்துகிட்ட வாங்கி அவங்கவங்க தளத்துல போட்டுடனும். எப்பல்லாம் அந்த விளம்பரத்துல இருக்கற சுட்டிய மத்தவங்க க்ளிக் பண்றாங்களோ அப்போல்லாம் உங்களுக்கு பணம் வரும் (ஒரு மாசம் கழிச்சு). ரொம்பபேர் நிறைய சம்பாதிக்கறாங்க.

ஆனா ரொம்பபேருக்கு அந்த அக்கௌன்ட் கொஞ்ச நாளைக்கப்றம் நிறுத்தப்பட்டிருக்கும். ஏன்னு நமக்கு ஒரு மின்னஞ்சல் வேற அனுப்புவாங்க. அத படிச்சு மண்டை காஞ்சவங்க ஏராளம். (அனுபவம் பேசுது :) )  பதிவோட தலைப்புல சொன்னமாதிரி கூகிள் அட்சென்ஸ் மட்டும் அந்த மாதிரி சேவையை குடுக்கறதில்ல, நிறைய நிறுவனங்கள் இருக்கு இந்த சேவைக்கு.




எதனால நம்ம கணக்க சொல்லாமகொள்ளாம சீல் வச்சுடறாங்க? அப்டி என்ன தப்பு பண்ணிட்டோம்னு சிலபேற்க்கு தெரியாது. அவங்களுக்கெல்லாம் நான் சொல்லப்போற இந்த சின்ன விஷயங்க உபயோகமா இருக்கலாம். நான் சொல்லப்போற சின்ன சின்ன விஷயங்கள தவிர்த்தா உங்க கணக்கு ரொம்ப நாளைக்கு பிரச்சனையை இல்லாம ஓடும் லாபத்தோட...  (என்னாது இதெல்லாம் உங்களுக்கு தண்ணிபட்டபாடா? அப்போ ஒன் ஸ்டெப் பேக்) சரி வாங்க விஷயத்துக்கு போவோம்.

நம்மளோட சொந்த கதை சோக கதைக்குன்னு வச்சுருக்கற ஈமெயில் அக்கவுன்ட்ட அந்த விளம்பரத்துக்கு பயன்படுத்தாதீங்க.
ஹையா எனக்கு கல்யாணம்னு சின்னத்தம்பி படத்துல ஒருத்தர் குதிப்பாரே அந்தமாதிரி எல்லார்கிட்டயும் சொல்லாதிங்க.
உங்க தனிப்பட்ட விஷயங்களுக்குனு இருக்கற தளத்த அந்த விளம்பரங்களுக்காக பயன்படுத்தக்கூடாது.
உங்க நண்பர்கள் வட்டாரத்துல இப்டி இப்டி பண்ணுனா எனக்கு பைசா வரும் அதுக்காக நீ அப்டி அப்டி அந்த விளம்பர சுட்டியில க்ளிக் பண்ணுனு சொல்லக்கூடாது.
நாம முதல் முதலா புதுசா வாங்குன பைக்க நொடிக்கொருதரம் வெளிய போய் இருக்கா இருக்கான்னு பாத்துட்ருப்போம்ல அந்தமாதிரி பேஜ் இம்ப்ரெஷன் குடுக்குறேன் பேர்வழின்னு உங்க விளம்பரங்கள் போட்ருக்க தளத்த போய் அடிக்கடி பார்ப்பதை தவிர்த்துவிடுவது நல்லது.
ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கொருதரம் அதுல போய் பதிவு போடுதல் கூடாது.
உங்க மௌஸ் வேலை செய்யுதான்னு பாக்கறதுக்குகெல்லாம் அந்த விளம்பரத்த நீங்களே போய் க்ளிக்க கூடாது..
பதிவு திருட்டு கூடவே கூடாது.

( யார்ரா இவன்! எல்லாம் கூடாது கூடாதுனுடே இருக்கானு நெனைக்கரவங்களுக்காக அது ஏன் கூடாதுன்னும் சொல்றேன்)


பர்சனல் ஈமெயில் யூஸ் பண்றப்போ ஒருவேள உங்க கணக்க சில காரணங்களால் தடை பண்ணிட்டா அதுக்கப்றம் நீங்க எப்பவும் அந்த கணக்க அதாவது அந்த விளம்பரம் சம்மந்தப்பட்ட கணக்க பயன்படுத்த முடியாது. அதனால விளம்பரத்துக்குனு ஒரு ஈமெயில் ஐடி உருவாக்கிக்கோங்க.
எல்லார்கிட்டயும் ஏன் சொல்லக்கூடாதுன்னா, நீங்க சொல்ற நண்பர் அல்லது நண்பிகாக உயிரையும் குடுப்பேன் இதென்ன ஜுஜுபி மேட்டர்னு காச்சலுக்கு மாத்திரை சாப்டரமாதிரி, சாப்டரதுக்கு முன்னாடி ஒரு பத்து தடவ சாப்டப்றம் பத்து தடவனு உங்க தளத்துல இருக்கற விளம்பரத்த க்ளிக் செஞ்சா ஒரே IP'ல இருந்து க்ளிக் செஞ்ச காரணத்துக்காகவும் உங்க கணக்கு முடக்கப்பட வாய்ப்பு இருக்கு.
உங்க தனிப்பட்ட தளத்த ஏன் பயன்படுத்தக்கூடாதுன்னா அதுல தினம் உங்க பதிவு போடுற வாய்ப்பிருக்கும், அது எப்டி வந்துருக்குனு நீங்க அத அதிகமுறை பாக்கறதுக்கும் வாய்ப்பிருக்கும். இந்த காரணத்துக்காகவும் அதாவது பேஜ் இம்ப்ரெஷன் ஒரே IP'ல இருந்தது வந்தாலும் உங்க கணக்கு அப்பீட் ஆகறதுக்கு வாய்ப்பிருக்கு. புது பைக்க பாக்கறமாதிரி பாக்கக்கூடாதுன்னு சொன்னதுக்கும் இதுதான் காரணம். ப்ரிவியுல பாத்தா பிரச்சனையை இல்ல.
எப்பவும் உங்க தளத்த சுருசுருப்பா வச்சுருக்கணும் ஆடிக்கொருதரம் அம்மாவசைக்கொருதரம் பதிவு போட்டா சர்ச் (தேவாலையம் இல்ல:) ) என்ஞ்சின்ல முதல் பக்கம் வர்றது ரொம்ப குறைவு. அப்டி கொறஞ்சா ஒரு வருஷத்துக்குதான் நூறு டாலர் சம்பாதிக்க முடியும்.
நீங்களே உங்க தளத்துல இருக்கற விளம்பரத்த க்ளிக் பண்ணுனா சொந்த செலவுல சூனியம் வச்சமாதிரி ஆகிடும். டெய்லி அக்கௌன்ட்ல பணம் வரமாதிரி இருக்கும் ஆனா ஒரு மாசம் கழிச்சு ஆப்பு வரும், பின்ன ஒரு மின்னஞ்சலும் வரும் அந்த கம்பெனிலருந்து. பொறுமையா உக்காந்து படிக்கலாம் ஆனா அதுக்கப்றம் உங்க பேர்ல, விலாசத்துல விளம்பரம் அதே கம்பெனிலருந்து கெடைக்கறது கஷ்டம்.
கன்டென்ட் தெப்ட்னு சொல்ற பதிவு திருட்டு செஞ்சு உங்க தளத்துல போட்டுக்கக்கூடாது. நீங்க சுட்ட பதிவோட உரிமையாளர் உங்களுக்கு விளம்பரம் குடுக்கற கம்பெனிக்கு தகுந்த விவரங்களோட கம்ப்ளைன்ட் செஞ்சாலும் உங்க கணக்கு தடைபட வாய்ப்பிருக்கு.
தமிழவிட ஆங்கிலத்துல பதிவு போட்டா (விளம்பரத்திற்கு) உலகம் முழுவதும் உங்க தளம் பார்க்கப்பட்டு அதிக கிளிக்ஸ் கிடைக்கலாம். 
பண்றதெல்லாம் பண்ணிட்டு கீழ இருக்கற கொழந்த மாதிரி அழுதா ஒன்னும் நடக்காது. அதனால கவனமா இருங்க கனிசமா சம்பாதிங்க. வாழ்த்துக்கள்...

எனக்கு தெரிஞ்ச சில விஷயங்கள் இதெல்லாம். இதுல தவறு இருந்தாலும் சுட்டிக்காட்டலாம்.

இச்சேவையை வழங்கும் நிறுவன முகவரிகள்:
  1. Google AdSense 
  2. Exit Junction 
  3. Pocket Cents 
  4. Yahoo Publisher Network
  5. Fastclick
  6. AdBrite
  7. Kontera
  8. Bidvertiser
  9. Clicksor
  10. Infolinks
  11. Chitika

      0 comments:

      Post a Comment

       
      Copyright © ken. All rights reserved.
      Blogger template created by Templates Block | Start My Salary
      Designed by Santhosh